
லடாக்கில் உள்ள எல்லை கட்டுபாட்டு கோடு பகுதிக்கு பொறுப்பான 14ஆவது கோர் படைப்பிரிவை இந்திய தரைப்படை வலுப்படுத்தி வருகிறது.
இந்த படைப்பிரிவில் 3 டிவிஷன் வீரர்கள் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக ஒரு டிவிஷன் வீரர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த மாற்றங்கள் அனைத்தும் பனிக்கால சவால்கள் மற்றும் சீன அச்சுறுத்தல்களை முன்னிட்டு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது எல்லையோரம் இரு நாடுகளும் தலா 30,000 வீரர்களை குவித்துள்ள நிலையில் இந்தியா 50,000-60,000 வீர்ரகளையும் சீனா 60,000 வீரர்களையும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.