
“தியேட்டர் கமாண்ட் கான்செப்ட்டை” சரிபார்க்க பல படையில் உள்ள 30,000 துருப்புக்களை உள்ளடக்கிய ஒரு பெரிய இராணுவ பயிற்சியை வெள்ளிக்கிழமை இராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே ஆய்வு செய்தார்.
இது “எதிரிகளின் எல்லைக்குள் துருப்புக்களை களமிறக்கி தாக்குவதை” பிரதிபலிக்கும் வகையில் கணிசமான எண்ணிக்கையிலான துருப்புக்கள், வாகனங்கள், பீரங்கித் துப்பாக்கிகள் மற்றும் கவச வாகனங்களை விமானத்தில் இருந்து தரையிறக்கி பயிற்சி நடத்தப்பட்டது. ராஜஸ்தானின் பாலைவனப் பகுதி, குஜராத்தில் உள்ள ரான் ஆஃப் கட்ச் மற்றும் அரேபிய கடலில் இந்தியா-பாகிஸ்தான் கடற்கரையை ஒட்டியுள்ள பல்வேறு சதுப்பு நில பகுதிகளில் “தக்ஷின் சக்தி” என்ற இந்த பயிற்சி நடைபெறுகிறது.
கடந்த ஒரு வாரமாக இந்திய இராணுவத்தின் காலாட்படை, மெகானைஸ்டு இன்பான்ட்ரி மற்றும் வான்வழிப் படைகள் ஆகியவற்றின் மூலம் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.