
சமீபத்தில் மணிப்பூர் மாநிலத்தில் 46ஆவது அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் பட்டாலியனுடைய கட்டளை அதிகாரி அவரது மனைவி மகன் மற்றும் மூன்று வீரர்கள் பயங்கரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
மேலும் வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் அதிகரித்துள்ள பயங்கரவாத செயல்கள் ராணுவத்தின் பார்வைக்கு வந்துள்ளன.
இதுதவிர அஸ்ஸாம், மணிப்பூர், நாகலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உல்ஃபா, PLA, PREPAK, NSCN-K (YA), KYKL, UNLF போன்ற அமைப்புகள் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை.
ஆகவே தற்போது இந்திய ராணுவம் வடகிழக்கு மாநிலங்களில் படைக்குறைப்பு செய்யும் நடவடிக்கையை மீண்டும் பரிசீலனை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.