பயங்கரவாதிகளை வீழ்த்த மாபெரும் தேடுதல் வேட்டை; இராணுவ தளபதி தகவல்

  • Tamil Defense
  • November 13, 2021
  • Comments Off on பயங்கரவாதிகளை வீழ்த்த மாபெரும் தேடுதல் வேட்டை; இராணுவ தளபதி தகவல்

மணிப்பூரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கலோனல் உட்பட ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் குறித்து இராணுவ தளபதி நரவனே அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மியான்மர் எல்லையை காவல் செய்து வரும் இராணுவ வீரர்கள் பயங்கரவாதிகள் தப்பித்து எல்லை தாண்டாத வண்ணம் காவல் காத்து வருகின்றனர் .

இந்த பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை வீழ்த்த தற்போது மாபெரும் ஆபரேசன் தொடங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் குஹா பட்டாலியனின் கமாண்டிங் அதிகாரி விப்லவ் திரிபாதி அவர்கள் வீரமரணம் அடைந்துள்ளார்.

இந்த தாக்குதலை People’s Revolutionary Party of Kangleipak’s (PREPAK) என்ற பயங்கரவாத இயக்கம் நடத்தியுள்ளது என சந்தேகிக்கப்படுகிறது.