சர்வதேச எல்லையோரம் உள்ள ஒக்ட்ரோய் எல்லை காவல்சாவடியில் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படையின் கமான்டன்ட் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் இந்திய தரப்பு அதிகாரிகள் பாகிஸ்தானை சேர்ந்த ஆளில்லா விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி வரும் செயலுக்கு மிக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர், அதேபோல் பாகிஸ்தானியர்களும் இந்தியாவின் கட்டுமான பணிகளுக்கு எதிரப்பு தெரிவித்தனர்.
பின்னர் இருதரப்பினரும் எல்லையோரம் உள்ள தூண்கள் மற்றும் இதர கட்டுமான அமைப்புகளை பராமரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பு பற்றி எல்லை பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கையில் இருதரப்பும் எல்லையோரம் அமைதியை பேணவும் பேச்சுவார்த்தை மூலம் குழப்பங்களை தீர்க்கவும் உறுதி பூண்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.