ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரின் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச அளவிலான விமான கண்காட்சி நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்பதற்காக இந்தியா சார்பில் சரங் ஹெலிகாப்டர் சாகச குழு, சூர்யகிரண் விமான சாகச குழு ஆகியவை தங்களது த்ருவ் மற்றும் ஹாக் வானூர்திகளுடன் சென்றுள்ளன.
இவற்றுடன் நமது உள்நாட்டு தயாரிப்பான மூன்று இலகுரக தேஜாஸ் போர் விமானங்களும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளன, வரும் 14ஆம் தேதி இந்த கண்காட்சி துவங்க உள்ளது.
இந்த கண்காட்சியில் மிகவும் புகழ்பெற்ற பல்வேறு நாட்டு வானூர்தி சாகச அணிகள் கலந்து கொள்கின்றன அவற்றுடன் சவுதி ஹாக்ஸ், அமீரகத்தின் அல் ஃபுர்சான் மற்றும் ரஷ்யாவின் நைட்ஸ் ஆகியவையும் கலந்து கொள்ள உள்ளன என்பது கூடுதல் தகவல் ஆகும்.