அணு சப்ளையர்கள் குழுவில் இந்தியாவுக்கு உறுப்பினர் அந்தஸ்து காலநிலை மாற்றத்தை சமாளிக்க அவசியம் தேவை !!
1 min read

அணு சப்ளையர்கள் குழுவில் இந்தியாவுக்கு உறுப்பினர் அந்தஸ்து காலநிலை மாற்றத்தை சமாளிக்க அவசியம் தேவை !!

இங்கிலாந்து நாட்டின் க்ளாஸ்கோ நகரில் காலநிலை மாற்றம் தொடர்பான கோப்26 மாநாடு நடைபெற்று வருகிறது, இதில் இந்தியாவும் பங்கு பெறுகிறது.

இந்த கூட்டத்தில் பேசிய இந்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியா சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் எரிபொருள்களை பயன்படுத்துவதை குறைத்துவிட்டு அணு சக்தி நோக்கி நகர வேண்டுமெனில்

அணு சப்ளையர்கள் குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும் காரணம் அணு தொழில்நுட்பம் பரவலாக மிகப்பெரிய அளவில் பணமும் அதற்கான அணு பொருட்களும் தேவைகளை கருத்தில் கொண்டு பெருமளவில் தேவைப்படும் என வலியுறுத்தினார்.

இந்த அணு சப்ளையர்கள் குழு என்பது 48 நாடுகள் கொண்ட உலகளாவிய அமைப்பு இந்த அமைப்பு தான் உலகளாவிய அணு வர்த்தகத்தை கட்டுபடுத்தவும் தீர்மானிக்கவும் செய்யும் அமைப்பாகும்.

இந்த அமைப்பில் இணைய கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியா விண்ணப்பித்தது பெரும்பாலான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்தாலும் சீனா இதற்கு தெரிவித்து வருகிறது.

இதற்கு காரணமாக சீனா, அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்து இடவில்லை ஆகவே அத்தகைய நாடுகள் பற்றிய பொது கருத்தொற்றுமை ஏற்படும் வரை அனுமதிக்க கூடாது என விளக்கம் கூறியுள்ளது.

இந்தியா விண்ணப்பித்ததை தொடர்ந்து பாகிஸ்தானும் அதே ஆண்டு இந்த அமைப்பில் இணைய விண்ணிப்பித்ததும் ஆனால் அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்து இடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.