இந்திய எல்லையோரம் மோதல்களை அதிகரிக்க சீனா தயார் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக அறிக்கை !!

  • Tamil Defense
  • November 5, 2021
  • Comments Off on இந்திய எல்லையோரம் மோதல்களை அதிகரிக்க சீனா தயார் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக அறிக்கை !!

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தால் சீனாவின் பாதுகாப்பு பற்றிய குழுவிற்கு ஆய்வறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த ஆய்வறிக்கையில் இந்தியா மற்றும் சீனா இடையேயான மோதல்கள் பற்றி ஒரு அத்தியாயமே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் சீனா தனது வீரர்களுக்கு அதிக உயர பகுதிகளில் இயங்க தீவிரமாக பயிற்சி அளித்து வருவதாகவும், கனரக தளவாடங்களை குவித்து வருவதாகவும்

மேலும் பல்வேறு அதிநவின ராணுவ தளவாடங்களை சோதனை செய்துள்ளதாகவும் கடந்த ஆண்டு முழுவதும் முப்படைகள் கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர தைவான் குறித்த திட்டம் ஒன்றும் சீனாவசம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது, மிக நீண்ட காலமாகவே சீனா தைவானை ஆக்கிரமிப்பு செய்ய முயல்வது குறிப்பிடத்தக்கது.