
அடுத்த வருட ஆரம்பத்தில் இருந்து ரஃபேல் விமானங்கள் தரம் உயர்த்தப்பட உள்ளன !!
அடுத்த மூன்று மாதங்களில் ரஃபேல் போர் விமானங்களை தரம் உயர்த்தும் பணிகள் துவங்க உள்ளதாக பாதுகாப்பு துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக இந்திய விமானப்படை குழு ஒன்று தற்போது ஃபிரான்ஸ் சென்று தரம் உயர்த்தும் பணிகளில் ஃபிரெஞ்சு குழுவினருக்கு உதவி வருகிறது.
இந்திய தேவைக்கேற்ப தரம் உயர்த்தப்படும் ரஃபேல் போர் விமானங்களின் வீரியம் அதிகரிக்கும் என இந்திய விமானப்படை மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளால் கூறப்படுகிறது.
மேலும் ஒரு ரஃபேல் போர் விமானத்தை முழுவதுமாக தரம் உயர்த்த சுமார் 12 முதல் 15 மாதங்கள் ஆகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.