2022ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் எஸ்400 எல்லையில் நிறுத்தம் !!

  • Tamil Defense
  • November 21, 2021
  • Comments Off on 2022ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் எஸ்400 எல்லையில் நிறுத்தம் !!

வருகிற 2022ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இரண்டு எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்புகள் எல்லையோரம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவில் இருந்து வெளியாகும் தகவல்களின்படி எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்புகளின் டெலிவிரி துவங்கி உள்ளதாகவும் அடுத்த மாதம் அவற்றிற்கான ரேடார்கள் இந்தியா வர உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா மொத்தமாக ஐந்து எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது இவை வரும் பட்சத்தில் இந்திய வான் பாதுகாப்பு பன்மடங்கு வலுப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.