2022ல் மேலதிக அஸ்திரா ஏவுகணைகளை பெற உள்ள இந்திய விமானப்படை மற்றும் கடற்படை !!
கடந்த ஆண்டு பாதுகாப்பு அமைச்சகம் இந்திய விமானப்படையின் சுகோய்30 எம்.கே.ஐ மற்றும் இந்திய கடற்படையின் மிக்29கே ஆகிய போர் விமானங்களுக்காக சுமார் 250 அஸ்திரா ஏவுகணைகளுக்கான ஒப்பந்தம் செய்து கொண்டது.
முதல் தொகுதி அஸ்திரா மார்க் 1 பார்வைக்கு அப்பால் உள்ள வானிலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் 2022-2023 வாக்கில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் டெலிவரி செய்யப்படும் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இந்திய விமானப்படைக்கு 2019ஆம் ஆண்டு 50 Pre Induction ரக அஸ்திரா ஏவுகணைகள் டெலிவிரி செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 200 அஸ்திரா ஏவுகணைகள் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது இதற்காக சுகோய்30 விமானங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும் இந்திய கடற்படையின் மிக்29 கே போர் விமானங்களும் மேம்படுத்தப்பட்டு அவற்றிற்கான 50 அஸ்திரா ஏவுகணைகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர இந்திய விமானப்படையின் மிக்29 யு.பி.ஜி விமானங்கள் மற்றும் இலகுரக தேஜாஸ் ஆகியவற்றிலும் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது அவை முடியும் பட்சத்தில் சுமார் 400-500 அஸ்திரா ஏவுகணைகளுக்கான ஒப்பந்தம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.