
இந்திய தரைப்படை தான் பயன்படுத்தி வரும் சண்டை ரேடியோ வலையமைப்பை புதிய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மென்பொருள் திறன் கொண்ட ரேடியோக்களால் மாற்றியமைக்க உள்ளது.
தற்போது இந்திய தரைப்படை பயன்படுத்தி வரும் ரேடியோக்கள் HF, VHF மற்றும் UHF என ஒவ்வொரு அலைவரிசைக்கும் தனித்தனி ரேடியோக்களை கொண்டவை ஆகும்.
ஆனால் மென்பொருள் திறன் கொண்ட ரேடியோக்களில் இந்த பிரச்சினை இல்லை, மேலும் இவற்றில் தெளிவாக தகவல்களை பரிமாற முடியும்.
இவற்றை கொண்டு பல்வேறு அலைவரிசைகளில் தகவல்களை பரிமாறி கொள்ளலாம்.மேலும் எதிரிகளால் முடக்கவோ இடைமறிக்கவோ முடியாது போன்ற சிறப்பம்சங்களை கொண்டது.