அமெரிக்கா மற்றும் இரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ள இந்தியா

  • Tamil Defense
  • November 17, 2021
  • Comments Off on அமெரிக்கா மற்றும் இரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ள இந்தியா

வரவிருக்கும் வாரங்களில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா “2+2″ பேச்சுக்களை நடத்த உள்ளது – இது இந்தியாவின் strategic சுயாட்சிக்கான நடைமுறை வெளிப்பாடாக ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 6-ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இந்தியப் பயணத்திற்கு முன்னதாக, இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் 2+2 பேச்சுவார்த்தைகள் நடைத்த உள்ளனர்.ரஷ்யா மற்றும் இந்தியா அமைச்சர்கள் இது போல சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

குவாட்டின் உறுப்பினர்களான அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் “2+2″ ஏற்பாட்டில் இந்தியா பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவின் போர்க்குணமிக்க எழுச்சிக்கு எதிராக அமைக்கப்பட்டது தான் இந்த குவாட் குழு.குழுவின் அதிகாரிகள் முதன்முதலில் 2017 இல் சந்தித்தனர், அதைத் தொடர்ந்து 2019 இல் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் முதல் கூட்டம் நடைபெற்றது.இந்த ஆண்டு மார்ச் மாதம் நான்கு குவாட் நாடுகளின் தலைவர்களின் கூட்டமாக இது மேலும் உயர்த்தப்பட்டது.மார்ச் மாதத்தில் குவாட் உச்சிமாநாடு நடந்தது. செப்டம்பரில் ஒரு தனிப்பட்ட குவாட் கூட்டத்தைத் அமெரிக்கா நடத்தியது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் கிழக்கு லடாக்கில் பல இடங்களில் சீனத் துருப்புக்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததில் இருந்து இந்தியாவுடன் பதட்டமான உறவை சீனா கொண்டுள்ளது.மேலும் சீனாவுடனான ரஷ்யாவின் உறவுகளும் தற்போது வளர்ந்து வருகிறது.இந்நிலையில் தற்போது இரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

அமெரிக்காவுடனான “2+2″ பேச்சுவார்த்தை என்பது இருதரப்பு மற்றும் இந்தோ-பசிபிக் மற்றும் குவாட் ஆகிய குறித்தும் மூலோபாய உறவுகளை ஆழப்படுத்துவது குறித்தும் நடத்தப்பட உள்ளது.

இதற்காக எஸ் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நான்காவது முறையாக இந்தியா-அமெரிக்க சந்திப்புக்காக வாஷிங்டனுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதற்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.

செப்டம்பர் 2018, டிசம்பர் 2019 மற்றும் கடந்த ஆண்டு அக்டோபரில் இதுவரை இரு நாடுகளுக்கும் இடையே மூன்று சுற்று உரையாடல்கள் நடந்துள்ளன.

இந்தியாவிற்கு s-400 ட்ரையம்ஃப் ஏவுகணை அமைப்பை இரஷ்யா வழங்கி வருவதால், ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடனான “2+2″ பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.எஸ்-400 ட்ரையம்ஃப் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு, நீண்ட தூரத்தில் வரும் எதிரி போர் விமானங்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகளை குறிவைத்து அழிக்கும் தன்மை கொண்டது.இது இந்தியாவின் திறன்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

அக்டோபர் 2018 இல் ஐந்து எஸ்-400 படைப்பிரிவுகளுக்கு ரஷ்யாவுடன் 5.43 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது, மேலும் அனைத்து விநியோகங்களும் ஐந்து ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லடாக் செக்டரில் இந்தியா சீனாவுடன் மோதலில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் இந்திய விமானப்படை (ஐஏஎப்) எஸ்-400 அமைப்புகளின் முதல் பிரிவை பெற உள்ளது.அதே நேரம் சீனா திபெத்தில் உள்ள நகரி கார் குன்சா மற்றும் நியிஞ்சி விமான தளத்தில் ஏற்கனவே இரண்டு எஸ்-400 படைகளை சீனா நிறுத்தியுள்ளது.

இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு கவலையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.