அடுத்த வருடம் 5ஆம் தலைமுறை ஆம்காவின் சோதனை விமானத்திற்கு அனுமதி !!

  • Tamil Defense
  • November 23, 2021
  • Comments Off on அடுத்த வருடம் 5ஆம் தலைமுறை ஆம்காவின் சோதனை விமானத்திற்கு அனுமதி !!

இந்தியா சொந்தமாக தயாரித்து வரும் ஐந்தாம் தலைமுறை ஆம்கா விமானத்தின் சோதனை விமானத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்திய விமானப்படை, ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, வானூர்தி மேம்பாட்டு முகமை, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவை கலந்தாலோசித்து,

இதற்கான கோப்புகளை பாதுகாப்பு துறை தொடர்பான கேபினட் கமிட்டியின் பார்வைக்கு அனுப்பி வைக்க உள்ளன பின்னர் அந்த கமிட்டி இதற்கான அனுமதிகளை வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஐந்தாம் தலைமுறை ஆம்காவின் சோதனை விமானத்திற்கான விலையே தலையை சுற்ற வைக்கும் அளவுக்கு இருக்கிறது, இதன் எதிர்பார்க்கப்படும் மதிப்பு சுமார் 15,000 கோடி ரூபாய் ஆகும்.

ஆம்காவின் சோதனை விமானம் 2025-2026 ஆண்டு வாக்கில் பறக்க தயாராகும் ஆனால் இதற்கான என்ஜின் இனிதான் இறுதி செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.