
இந்தியா சீனா மற்றும் பாகிஸ்தானை விடவும் குறைவான எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா பற்றி சமீபத்தில் வெளியான பெண்டகன் ஆய்வறிக்கையில் 2030ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 1000 அணு குண்டுகளை படையில் இணைக்க உள்ளதாகவும் தற்போது 200க்கும் அதிகமான அணு ஆயுதங்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தானும் தனது பங்கிற்கு அணு ஆயுத தயாரிப்பு அது சார்ந்த தளவாட தயாரிப்பு ஆகியவற்றை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
தற்போது உலகம் முழுவதும் 13,080 அணு ஆயுதங்கள் உள்ளதாகவும் அவற்றில் 9,600 ராணுவ சேவையில் உள்ளதாகவும் மீதமுள்ளவை அனைத்தும் செயலிழக்கப்பட உள்ளதாகவும்,
உலகளாவிய அணு ஆயுதங்களில் சுமார் 90% சதவிகிதம் அளவிலானவை ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.