
எகிப்து நாட்டு விமானப்படை தனது பழைய பயிற்சி ஜெட் விமானங்களை மாற்றி புதிய விமானங்களை இணைக்க விரும்புகிறது.
இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமும் முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் இலகுரக தேஜாஸ் போர் விமானத்தின் LIFT ரக விமானத்தை எகிப்துக்கு விற்க முன்வந்துள்ளது.
இந்த ஒப்பந்தம் கிடைத்தால் ஏறத்தாழ 100 விமானங்கள் வாங்கப்படும், ஆகவே ஒப்பந்தத்தை பெறும் பொருட்டு அந்நாட்டிலேயே பராமரிப்பு மையம் ஒன்றை அமைக்கவும் முன்வந்து உள்ளது.