
கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) மற்றும் நியூ ஸ்பேஸ் ரிசர்ச் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் “ஆளில்லா அமைப்புகள், ஸ்வார்ம் ட்ரான் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி அமைப்புகளில் பல்வேறு தயாரிப்புகள் மற்றும் அமைப்புகளின் கூட்டு வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கான ஒத்துழைப்பைஆராய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
நவீன யுத்தத்தில் ட்ரோன்களை தாக்குதல் உத்தியாகப் பயன்படுத்துவதை இந்தியா தாமதமாகத் தொடங்கியுள்ளது.ரஸ்டம் என்னும் ஆளில்லா விமானத்தை டிஆர்டிஓ பல வருடமாக மேம்படுத்தி வருகிறது என்பது உண்மையில் ஒரு புதிய நிகழ்வு அல்ல.
ரஸ்டமிற்கு பிறகு தொடர்ச்சியாக ரஸ்டம்-1 மேம்படுத்தப்பட்டது எனினும் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப ஒரு அதிநவீன ட்ரோன் தேவை உள்ளது.இதனால் அதிநவீன ட்ரோனை மேம்படுத்தவும் அதே போல அமெரிக்காவின் MQ9 ரீப்பர் ட்ரோன்களை பெறவும் இந்தியா முயற்சித்து வருகிறது.
இந்தியாவின் ரஸ்டம் ட்ரோன்கள்
சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள சாலகெரேயில் இந்தியா ருஸ்டம்-2 ஆளில்லா விமானத்தை சோதனை செய்தது.இது முதன்மையாக அமெரிக்க ட்ரோன் மாடலை மாதிரியாக கொண்டு கட்டமைக்கப்பட்டது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போல பெரிய அளவிலான தாக்கும் ட்ரோன்களை இந்தியா இன்னும் மேம்படுத்தவில்லை.ட்ரோன்கள் துறையை பொறுத்தவரை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.
கிரண் மார்க்-II
கிரண் மார்க்-II இடைநிலை ஜெட் பயிற்சி விமானத்தை ஓஎம்சிஏ (ஆப்டிகல் ஆளில்லா போர் விமானம்) ஆக மாற்ற இந்தியா சோதனை செய்து வருவதாக இப்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.கிரன் மார்க்-2 விமானத்தை ஆளில்லா விமானமாக மாற்ற இந்திய அறிவியலாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இந்த திட்டம் வெற்றிபெற்றால் ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட மிக்-21 மற்றும் மிக்-27 போர் விமானங்களுக்கும் நீட்டிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரண் எம்.கே-II என்பது 1976 இல் HAL ஆல் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் ஆரம்ப இரண்டு இருக்கைகள் கொண்ட இடைநிலை ஜெட் பயிற்சி விமானமாகும்.
இது 70 களின் பிற்பகுதி முழுவதும் உற்பத்தியில் இருந்தது, இறுதியாக 1989 இல் உற்பத்தி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.