
மிக நீண்ட காத்திருப்புக்கு பின் அமெரிக்காவில் இருந்து உலகின் தலைசிறந்த ஆளில்லா விமானத்தை வாங்குவதற்கான பணிகள் துவங்கி உள்ளன.
பாதுகாப்பு கொள்முதல் வாரியத்திற்கு இதற்கான கோப்புகள் சமர்பிக்கப்பட்ட நிலையில் அதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்து பிரச்சினைகளை தீர்க்க முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.
இதற்கு பிறகு சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 30 ப்ரடேட்டர் ஆளில்லா விமானங்கள் இருதரப்பு அரசு ஒத்துழைப்பின் கீழ் வாங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.