
இந்திய அரசு அமெரிக்க அரசுடன் இந்திய விமானப்படைக்கு ISTAR அமைப்பை வாங்குவதற்காக பாதுகாப்பு தொழில்நுட்ப வர்த்தக செயல்திட்டத்தின் கீழ் முயற்சி எடுத்து வருகிறது.
இந்த விமானம் உளவுத்துறை, கண்காணிப்பு, இலக்கை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பலதரப்பட்ட நடவடிக்கைகளை பல்வேறு சென்சார்கள் மூலமாக மேற்கொள்ளும்.
தகவல்களை உடனுக்குடன் சேகரித்து களத்தில் இருக்கும் படைகளுக்கு உடனுக்குடன் வழங்குவதில் இத்தகைய விமானங்கள் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.
தற்போதைய தகவல்களின்படி அமெரிக்காவில் இருந்து இத்தகைய ஒரு விமானம் வாங்கப்படும் எனவும் DRDO நான்கு விமானங்களுக்கான கருவிகளை இந்தியாவிலேயே தயாரிக்கும்.
இந்தியாவின் ISTAR விமானங்கள் பம்பார்டியர் நிறுவனம் தயாரிக்கும் க்ளோபல் எக்ஸ்பிரஸ் ஜெட் ரக விமானத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் எனவும் மொத்தமாக இத்தகைய ஐந்து விமானங்களை வாங்குவதற்கான முயற்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.