இத்தாலிய பாதுகாப்பு நிறுவனம் மீதான தடையை நீக்கிய இந்தியா !!

  • Tamil Defense
  • November 8, 2021
  • Comments Off on இத்தாலிய பாதுகாப்பு நிறுவனம் மீதான தடையை நீக்கிய இந்தியா !!

இந்தியா ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தடை செய்த இத்தாலிய நிறுவனத்திற்கு ஆறுதலளிக்கும் வகையில் தடை பட்டியலில் இருந்து தற்போது நீக்கியுள்ளது.

சுமார் 3600 கோடி மதிப்பில் 12 அகஸ்டா வெஸ்ட்லான்ட் ரக ஹெலிகாப்டர்களை விவிஐபி பயன்பாட்டிற்காக இந்திய விமானப்படைக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் லஞ்சம் கொடுத்ததாக தடை செய்யபட்டது.

தற்போது தடை நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட நிபந்தனைகள் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது இதுவரை இந்திய அரசுடன் செய்துகொண்ட எந்தவொரு ஒப்பந்தத்திலும் நிதி உதவி கோரக்கூடாது எனவும்,

ஏற்கனவே லியனார்டோ நிறுவனம் மீதான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சி பி ஐ விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.