குஜராத் மாநிலத்தில் உள்ள சர் க்ரீக் பகுதி பாகிஸ்தானுடைய சிந்து மாகாணத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது, சிந்து நதி கடலில் கலக்கும் இடத்தை ஒட்டி 96 கிமீ அளவுக்கு அமைந்துள்ள ஆள் நடமாட்டம் இல்லாத சதுப்பு நில பகுதியாகும்
இந்த பாதுகாப்பு பயிற்சியில் யில் இந்திய கடற்படை தரைப்படை விமானப்படை, கடலோர காவல்படை, எல்லை பாதுகாப்பு படை, குஜராத் காவல்துறை மற்றும் மாநில கடலோர காவல்துறை ஆகியவை கலந்து கொண்டன.
நவம்பர் 19 முதல் 22ஆம் தேதி வரையிலான நான்கு நாட்களில் இந்த பாதுகாப்பு பயிற்சி நடைபெற்றது இதில் பல்வேறு திறன்கள் சோதித்து பார்க்கப்பட்டன.