கொரோனா காலத்திற்கு பிறகு ராணுவம் மேற்கு எல்லையோரம் நடத்திய மிகப்பெரிய ஒருங்கிணைந்த போர் பயிற்சி !!

  • Tamil Defense
  • November 25, 2021
  • Comments Off on கொரோனா காலத்திற்கு பிறகு ராணுவம் மேற்கு எல்லையோரம் நடத்திய மிகப்பெரிய ஒருங்கிணைந்த போர் பயிற்சி !!

ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் எல்லையோர பகுதிகளில் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சி நடைபெற்று வருகிறது.

தரைப்படை, கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை, எல்லை பாதுகாப்பு படை, உளவு அமைப்புகள் ஆகியவற்றை சேர்ந்த 30,000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மிகப்பெரிய போர் பயிற்சி காரணமாக ஒட்டுமொத்த தார் பாலைவனம், ரான் மற்றும் க்ரீக் செக்டார்கள் முழுவதுமாக ராணுவ நடமாட்டம் அதிகமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பயிற்சியின் போது பல்வேறு அதிநவீன தளவாடங்கள் மற்றும் புதிய யுக்திகளை பாதுகாப்பு படைகள் செய்து பரிசோதனை செய்து கொண்டன.

தக்ஷின் ஷக்தி என பெயரிடப்பட்டுள்ள இந்த போர் பயிற்சியை வருகிற 26ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.