
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அடுத்த மாதம் அதாவது டிசம்பர் 6ஆம் தேதி அன்று இந்தியா வர உள்ளதாக இருநாட்டு அரசுகளும் உறுதி செய்துள்ளன.
இந்த சுற்றுபயணத்தின் போது இந்தியா ரஷ்யா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக நம்பதகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இந்திய மற்றும் ரஷ்ய கடற்படைகள் இடையே கூட்டு ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகலாம் என கூறப்படுகிறது.
இது தவிர ரெலோஸ் எனப்படும் மற்றொரு ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது அதன்படி இரு நாடுகளும் மற்றொருவரின் கடற்படை மற்றும் விமான தளங்களை எளிதில் பயன்படுத்தி கொள்ள முடியும்.
மேலும் 5,200 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 7 லட்சம் ஏகே-203 ரக துப்பாக்கிகளை தயாரிப்பதற்கான திட்டமும் இறுதி கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.