அடுத்த தலைமுறை ட்ரோன்கள் மற்றும் ரோபோட்டுகளை இணைந்து தயாரிக்க இந்தியா இஸ்ரேல் ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • November 12, 2021
  • Comments Off on அடுத்த தலைமுறை ட்ரோன்கள் மற்றும் ரோபோட்டுகளை இணைந்து தயாரிக்க இந்தியா இஸ்ரேல் ஒப்பந்தம் !!

இந்தியா இஸ்ரேல் இடையேயான வலுவான ஒத்துழைப்பின் மற்றொரு அடையாளமாக சமீபத்தில் வேறோரு கூட்டு தயாரிப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.

அதாவது அடுத்த தலைமுறை ட்ரோன்கள் ரோபோட்டுகள், க்வான்டம் கணிணியியல் மற்றும் சுய நுண்ணறிவு திறன் ஆகியற்றை இணைந்து தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனரகம் ஆகியவற்றிற்கு இடையே இருதரப்பு கண்டுபிடிப்பு ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் DRDO தலைவர் சதிஷ் ரெட்டி மற்றும் DDR & D தலைவர் டேனியல் கோல்ட் ஆகியோர் தங்களது நாடுகளின் சார்பாக கையெழுத்து இட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் கண்டுபிடிக்கப்படும் எந்தவொரு தொழில்நுட்பமும் இரண்டு நாடுகளும் பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது சிறப்பம்சம் ஆகும்.