பிரிட்டனுடன் மிக முக்கியமான ஒப்பந்தத்தை இறுதி செய்ய போகும் இந்தியா !!

  • Tamil Defense
  • November 2, 2021
  • Comments Off on பிரிட்டனுடன் மிக முக்கியமான ஒப்பந்தத்தை இறுதி செய்ய போகும் இந்தியா !!

பிரிட்டனில் உள்ள க்ளாஸ்கோவ் நகரில் இந்திய பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜாண்சன் ஆகியோர் சந்தித்து பேச உள்ள நிலையில் இரு நாடுகளிடையே மிக முக்கியமான நிகழ்வு ஒன்று நடைபெற உள்ளது.

அதாவது சரக்கு பரிமாற்ற ஒப்பந்தம் (MALE – Memorandum of Agreement on Logistics Exchange) ஒன்று கையெழுத்தாக உள்ளதாக வெளியுறவு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா ஏற்கனவே அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இத்தகைய ஒப்பந்தங்களை செய்துள்ளது, மேலும் ரஷ்யாவுடன் இதே போன்ற ரெலோஸ் எனும் ஒப்பந்தத்தை இறுதி செய்ய ஒப்பு கொண்டுள்ளது.

தற்போது மேற்குறிப்பிட்ட ஒப்பந்தம் பற்றி பார்க்கலாம் இந்த ஒப்பந்தத்தின் காரணமாக இனி இங்கிலாந்து செல்லும் இந்திய கப்பல்கள் மற்றும் விமானங்கள் முன் அனுமதி பெற தேவையில்லை.

இந்த செய்தி மிகழ்ச்சிகரமானது மட்டுமின்றி இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான உறவுகளில் மற்றொரு மைல்கல்லாக அல்லது புதிய அத்தியாயமாக இருக்கும் என்றால் அது மிகையல்ல.