சீன ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை, கடும் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா !!

  • Tamil Defense
  • November 3, 2021
  • Comments Off on சீன ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை, கடும் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா !!

சீனா கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு அதிநவீனமான ஹைப்பர்சானிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்தது இதனையடுத்து அனைத்து உலக நாடுகளும் தற்போது இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

தற்போதைய நிலையில் சீனா அமெரிக்காவை ஹைப்பர்சானிக் தொழில்நுட்பத்தில் முந்தி விட்டது, ஆகவே அமெரிக்கா ஏற்கனவே நிலவும் பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

இந்தியாவும் சீனாவுடன் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது ஆகவே தாமதம் ஆனாலும் இந்தியா ஹைப்பர்சானிக் ஆராய்ச்சியில் உறுதியாக உள்ளது.

அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தற்போது ஹைப்பர்சானிக் ஏவுகணை தொழில்நுட்பத்தில் அதிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.