வானிலிருந்தே ஏவப்படும் ஆளில்லா விமானங்களை இணைந்து தயாரிக்க இந்தியா அமெரிக்கா ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • November 12, 2021
  • Comments Off on வானிலிருந்தே ஏவப்படும் ஆளில்லா விமானங்களை இணைந்து தயாரிக்க இந்தியா அமெரிக்கா ஒப்பந்தம் !!

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான 11ஆவது ராணுவ தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முயற்சி குழுவின் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அப்போது இந்த கூட்டத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக இணைந்து வானிலிருந்தே அதாவது விமானங்களில் இருந்து ஏவப்படும் ஆளில்லா விமானங்களை கூட்டாக தயாரிக்க ஒப்பந்தம் செய்து கொண்டன.

இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் பாதுகாப்பு தயாரிப்பு செயலாளர் ராஜ் குமார் மற்றும் அமெரிக்கா சார்பில் இணை செயலர் க்ரேகோரி காஸ்னர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தரை வான் கடல் மற்றும் விமானந்தாங்தி கப்பல்களுக்கான தொழில்நுட்பங்களில் பணியாற்றி வரும் நான்கு கூட்டு செயல் குழுக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.