தேஜாஸ் விமானத்தில் ஃபிரெஞ்சு ஹாம்மர் ஏவுகணையை இணைக்க உள்ள இந்திய விமானப்படை !!
1 min read

தேஜாஸ் விமானத்தில் ஃபிரெஞ்சு ஹாம்மர் ஏவுகணையை இணைக்க உள்ள இந்திய விமானப்படை !!

இந்திய விமானப்படை தனது இலகுரக தேஜாஸ் போர் விமானங்களுக்காக ஃபிரான்ஸ் நாட்டிடம் ஹாம்மர் ஏவுகணைகளை ஆர்டர் செய்துள்ளது.

இந்த ஆர்டர் மூலமாக தேஜாஸ் போர் விமானத்தின் திறன்கள் அதிகரிக்கவும் வலுப்படவும் உள்ளது என இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஹாம்மர் ஏவுகணைகளை பயன்படுத்தி எந்த விதமான நிலப்பரப்பிலும் உள்ள பங்கர்களை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களின் கீழ் வாங்கப்படும் இந்த ஏவுகணைகளால் சுமார் 70கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க முடியும் என்பது கூடுதல் தகவல்.