மலேசிய தேஜாஸ் விமானத்திற்கான விலையை அறிவித்த இந்தியா, ஸ்வீடன் விமானத்தை விடவும் குறைவு !!

  • Tamil Defense
  • November 18, 2021
  • Comments Off on மலேசிய தேஜாஸ் விமானத்திற்கான விலையை அறிவித்த இந்தியா, ஸ்வீடன் விமானத்தை விடவும் குறைவு !!

ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மலேசியாவுக்கான தேஜாஸ் போர் விமானத்தின் விலையை அறிவித்துள்ளது.

ஒரு ஏசா ரேடார் பொருத்தப்பட்ட தேஜாஸ் விமானத்தின் விலை 41 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் .இது இந்திய மதிப்பில் 304 கோடி ரூபாய் குறைவாகும்.

இது இந்திய விமானப்படையின் தேஜாஸ் விமானங்களை விடவும் 5 கோடி குறைவாகும் மேலும் போட்டியில் உள்ள மற்றொரு விலை குறைவான ஸ்வீடனின் க்ரைப்பன் விமானத்தை விடவும் 19 மில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைவாகும்.

இவை அனைத்தும் மலேசிய விமானப்படையின் இலகுரக போர் விமானத்துக்கான தேடலில் நமது தேஜாஸ் விமானத்திற்கு பெரும் வலு சேர்க்கிறது என்றால் மிகையாகாது.