
சட்டீஸ்கர் மாநிலம் சுக்மாவில் நக்சல் எதிர்ப்பு போரில் ஈடுபட்டிருக்கும் 50ஆவது பட்டாலியன் வீரர்கள் தங்கியுள்ள முகாமில் மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதிகாலை 3.45 மணியளவில் ரித்தேஷ் ரன்ஜன் எனும் வீரர் தனது ஏகே47 ரக துப்பாக்கியை எடுத்து சக வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இதில் நான்கு வீரர்கள் இறந்த நிலையில் ஏழு வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர் அவர்களில் இருவரின் உடல்நிலை மோசமானதை அடுத்து மாநில தலைநகர் ராய்ப்பூருக்கு சிகிச்சைக்காக வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
இறந்த வீரர்களின் பெயர்களாவன ராஜ்மனி குமார் யாதவ், ரஜிப் மோன்டால், தான்ஜி மற்றும் தர்மேந்திர குமார் என மத்திய ரிசர்வ் காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட வீரர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.