குரோஷியா மற்றும் ஃபிரான்ஸ் ரஃபேல் ஒப்பந்தம் இறுதி !!

குராஷியா தனது விமானப்படைக்காக 12 ரஃபேல் போர் விமானங்களை ஃபிரான்ஸிடம் இருந்து வாங்கும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான விழாவில் ஃபிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மேக்ரான், ஃபிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் ஃப்ளாரன்ஸ் பார்லி, டஸ்ஸால்ட் குழும தலைவர் எரிக் டேப்பியர் மற்றும் குரோஷிய பிரதமர் ஆண்ட்ரேஜ் ப்ளென்கோவி குரோஷிய பாதுகாப்பு அமைச்சர் மரியோ பனோஸிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குரோஷிய தலைநகர் ஸாக்ரெபில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒப்பந்தத்தில் ஃபிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் ஃப்ளாரன்ஸ் பார்லி, டஸ்ஸால்ட் நிறுவன தலைவர் எரிக் டேப்பியர் மற்றும் குரோஷிய பாதுகாப்பு அமைச்சர் மரியோ பனோஸிக் ஆகியோர் கையெழுத்து இட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி ஃபிரெஞ்சு விமானப்படை பயன்படுத்தி வரும் 12 ரஃபேல் போர் விமானங்களை குரோஷிய விமானப்படையிடம் அவற்றிற்கான கருவிகளுடன் ஒப்படைக்கப்படும்,

மேலும் குரோஷிய விமானப்படைக்கு பராமரிப்பு பயிற்சிகள், மூன்று வருடங்களுக்கான உதிரி பாகங்கள் மற்றும் இதர சர்வீஸ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் பங்கு பெற்ற இந்த போட்டியில் கடந்த மே 28 அன்று ரஃபேல் போர் விமானங்கள் தேர்வு செய்யப்பட்டது என்பது கூடுதல் தகவல் ஆகும்.