
தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் இரு வேறு என்கௌன்டர்களில் மொத்தம் ஐந்து பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.குல்கமின் பாம்பே மற்றும் கோபால்போரா ஆகிய இரு இடங்களில் இந்த என்கௌன்டர் நடைபெற்றது.
கோபால்போரா பகுதியில் நடைபெற்ற என்கௌன்டரில் ரெசிஸ்டன்ஸ் ப்ரான்ட் எனப்படும் பயங்கரவாத இயக்கத்தின் கமாண்டர் அபாக் சிக்கந்தர் வீழ்த்தப்பட்டான்.
இதற்கு முன் குல்கமின் கோபல்போரா மற்றும் பாம்பே ஆகிய பகுதிகளில் பயங்கரவாதிகளின் இருப்பு குறித்து பாதுகாப்பு படைகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அந்த இரு இடங்களையும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.
வீரர்கள் மீது பயங்கரவாதிகள் சுடத் தொடங்கியதும் என்கௌன்டர் தொடங்கியது.இதில் ஐந்து பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.