சர்வதேச புவிசார் அரசியல் நிபுணரான பீட்டர் ஸெய்ஹான் டைம்ஸ் நவ் கருத்தரங்கு 2021 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் இந்தியா அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கவும் புதிய தொழில்நுடபங்களின் பிறப்பிடமாக மாறுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன,
ஆனால் இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து பாகிஸ்தானுடைய வீழ்ச்சி ஆகும் அதாவது வலிமையான பாக் சீனாவை விட வீழ்ச்சியடைந்த பாக் சீனாவை பற்றி தான் இந்தியா கவலைப்பட வேண்டும் என்றார்.
மேலும் பேசும் போது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கு அடங்காமல் பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும் ஆகவே பாகிஸ்தான் வீழ்ந்தால் அவை சுதந்திரமாக செயல்படும் என்றார்