
இந்திய கடற்படை சீன கடற்படையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல வகையான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஆளில்லா நீரடி வாகனங்கள் ஆகியவற்றை வாங்க திட்டமிட்டு உள்ளது.
இத்தகைய தளவாடங்கள் மூலமாக இந்திய பெருங்கடல் பகுதி பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீன கடற்படையின் நடமாட்டங்கள் இதர நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்காணிக்க திட்டமிட்டு உள்ளது.
இந்திய பெருங்கடல் மற்றும் பசிஃபிக் பெருங்கடல் பகுதிகளில் நீர்மூழ்கி கண்காணிப்பு மற்றும் எதிர்ப்பு திறன்களை வலுப்படுத்தவும் இந்திய கடற்படை திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.