
திங்கட்கிழமை அன்று இந்திய விமானப்படை மற்றும் இந்திய தரைப்படை ஆகியவை இணைந்து ஆபரேஷன் ஹெர்குலிஸ் என்ற பெயரில் மிகப்பெரிய கனரக போக்குவரத்து பயிற்சியை மேற்கொண்டன.
இந்த பயிற்சியில் மேற்கு கட்டளையக விமானப்படையின் முன்னனி விமான தளங்களில் இருந்து புறப்பட்ட சி17 க்ளோப்மாஸ்டர், சி130 சூப்பர் ஹெர்குலிஸ் மற்றும் ஏ.என்32 ஆகிய விமானங்கள் கலந்து கொண்டன.
இந்த பயிற்சியின் நோக்கம் குறைந்த கால கட்டத்தில் மிக விரைவாக எல்லைக்கு துருப்புகள் தளவாடங்கள் ஆயுதங்கள் மருந்து பொருட்கள் உணவு ஆகியவற்றை நகர்த்துவது ஆகும்.
இந்திய தரைப்படையின் 14ஆவது கோர் படைப்பிரிவு தான் உலகிலேயே அதிக உயரத்தில் அதிக வீரர்களை வைத்து இயங்கும் படைப்பிரிவாகும், அந்த வகையில் கடந்த வருடத்தில் சுமார் 60,000 வீரர்களை சீன எல்லையில் குவித்தது குறிப்பிடத்தக்கது.
தரைப்படையின் இந்த நகர்வுகளுக்கு விமானப்படையின் போக்குவரத்து விமானங்கள் மற்றும் போக்குவரத்து ஹெலிகாப்டர்கள் பேரூதவியாக அமையும் என்றால் மிகையாகாது.