முன்னாள் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிக்கு பத்ம விருது காரணம் என்ன ??
1 min read

முன்னாள் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிக்கு பத்ம விருது காரணம் என்ன ??

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான லெஃப்டினன்ட் கர்னல் காஸி சஜ்ஜாத் அலி ஜாஹீருக்கு பத்ம ஶ்ரீ விருது வழங்கப்பட்டது.

இவர் வங்கதேச விடுதலை போரின் போது பாகிஸ்தான் ராணுவத்தின் கொடுமைகளை கண்டு இந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வங்கதேச விடுதலை போரில் முக்கிய பங்காற்றினார்.

இவர் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் அதாவது இன்றைய வங்கதேசத்தில் பிறந்தவர் இந்த வருடத்தில் 71ஆவது வயதை தொடுகிறார் என்பதும் 1971ல் வங்கதேசம் விடுதலை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

பத்மஶ்ரீ விருது பெற்ற கையோடு அவர் இன்றும் பாகிஸ்தானில் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிலுவையில் உள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.