ஸ்ரீநகரில் பாதுகாப்பு படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல்

  • Tamil Defense
  • November 16, 2021
  • Comments Off on ஸ்ரீநகரில் பாதுகாப்பு படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல்

ஸ்ரீநகரில் பாதுகாப்பு படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி மற்றும் அவனுக்கு உதவிய இருவர் என மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

இந்த என்கௌன்டர் இரவு முழுவதும் நீண்டதாக காஷ்மீரின் ஐஜிபி விஜய குமார் கூறியுள்ளார்.இந்த சண்டையில் வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவன் ஆவான்.இவன் லஷ்கர் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் ஆவான்.

இந்த என்கௌன்டரில் பயங்கரவாதிக்கு ஆதரவு அளித்து தங்க உதவி செய்ய உள்ளூர் OGW முடாசீர் குல் என்பவனும் வீழ்த்தப்பட்டுள்ளான்.இவன் பயங்கரவாதியை தெற்கு மற்றும் வடக்கு காஷ்மீர் பகுதிகளுக்கு கூட்டிச் சென்று உதவியுள்ளான்.

மேலும் இந்த சண்டையில் ஹைதருக்கு உதவியாக இருந்த உள்ளூர் பயங்கரவாதி அமீர் என்பவனும் வீழ்த்தப்பட்டுள்ளான்.

நேற்று மாலை பயங்கரவாதிகள் இருப்பு குறித்து பாதுகாப்பு படைகளுக்கு தகவல் கிடைக்க சம்பவ இடத்தை பாதுகாப்பு படைகள் சுற்றி வளைத்துள்ளனர்.மறைந்திருந்த பயங்கரவாதி நமது வீரர்களை தாக்க தொடங்கிய போது என்கௌன்டர் ஆரம்பமானது.

ஆயுதங்கள் , மொபைல் போன் மற்றும் கணிணிகள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.