நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது சமீபத்தில் தனது புதிய அதிநவீன தாக்குதல் திறன் கொண்ட குழு ட்ரோன்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 25 ட்ரோன்கள் குழுவாக இயங்கி தங்களது தாக்குதல் உட்பட பல்வேறு இதர திறன்களை செய்து காண்பித்தன.
இந்த குழு ட்ரோன்களால் குறிப்பிட்ட அளவிற்கு மனித உதவியின்றி செயல்பட முடியும் மேலும் மிக ஆபத்தான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குழு ட்ரோன்களின் அறிமுகம் நாட்டின் 75ஆவது சுதந்திர விழாவை ஒட்டி ஜான்சி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.