உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஷக்தி மின்னனு போரியல் அமைப்பு கடற்படைக்கு டெலிவரி !!

  • Tamil Defense
  • November 19, 2021
  • Comments Off on உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஷக்தி மின்னனு போரியல் அமைப்பு கடற்படைக்கு டெலிவரி !!

DRDOவின் ஒரு பிரிவான பாதுகாப்பு மின்னனு ஆராய்ச்சி ஆய்வகம் தயாரித்த அதிநவீன ஷக்தி மின்னனு போரியல் அமைப்பை பிரதமர் மோடி கடற்படையிடம் ஒப்படைக்க உள்ளார்.

இந்த மின்னனு போரியல் அமைப்பானது இந்திய கடற்படையின் அனைத்து முன்னனி போர்கப்பல்களிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த அமைப்பை கொண்டு புதிய மற்றும் பழைய ரேடார்களை இடைமறிப்பது, முடக்குவது, அடையாளம் காண்பது போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

மேலும் இவற்றால் நமது போர் கலன்களையும் எதிரி கலன்களிலும் ரேடார்கள் மற்றும் இதர மின்னனு போரியல் அமைப்புகளிடம் இருந்து பாதுகாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாவது ஷக்தி அமைப்பு ஐ.என்.எஸ். விஷாகப்பட்டினம் மற்றும் இரண்டாவது அமைப்பு ஐ.என்.எஸ். விக்ராந்த் ஆகிய முன்னனி போர்கப்பல்களில் பொருத்தப்பட்டு உள்ளது.

மேலும் சுமார் 1805 கேடி ரூபாய் மதிப்புள்ள பன்னிரண்டு ஷக்தி மின்னனு போரியல் அமைப்புகளை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்து வருகிறது.