ஏர்பஸ் நிறுவனத்தின் ராணுவ விமானத்திற்கு அதிநவீன இந்திய தயாரிப்பு ரேடார்கள் !!

  • Tamil Defense
  • November 27, 2021
  • Comments Off on ஏர்பஸ் நிறுவனத்தின் ராணுவ விமானத்திற்கு அதிநவீன இந்திய தயாரிப்பு ரேடார்கள் !!

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த இரண்டு அதிநவீன ரேடார்களை இந்திய விமானப்படைக்கான 56 ஏர்பஸ் சி295 சரக்கு விமானங்களில் பொருத்த உள்ளனர்.

Radar Warning Receiver (RWR) மற்றும் Missile Approach Warning Systems (MAWS) ஆகியவை தான் அந்த இரண்டு வகையான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரேடார்கள் ஆகும்.

இந்த திட்டம் தான் தனியார் துறையில் மேற்கொள்ளப்படும் முதலாவது மேக இன் இந்தியா ஏரோஸ்பேஸ் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்பஸ் நிறுவனம் மேற்குறிப்பிட்ட RWR மற்றும் MAWS ஆகிய ரேடார்களை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து வாங்கி சி295 விமானங்களில் பொருத்த உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த MAWS ரேடார் புற ஊதா கதிர்களை வைத்து விமானத்தை நோக்கி வரும் ஏவுகணைகள் பற்றிய எச்சரிக்கையை விமானிகளுக்கு வழங்கும்,

மேலும் RWR ரேடாரானது பிற விமானங்களில் இருந்து வெளியாகும் ரேடார் கதிர்வீச்சுகளை கண்டறிந்து அதன் மூலம் விமானிகளுக்கு எதிரி விமானங்கள் பற்றிய எச்சரிக்கையை வழங்கும்.

அடுத்த நான்கு வருடங்களில் முதல் 16 விமானங்கள் இந்திய விமானப்படைக்கு டெலிவரி செய்யப்படும் மீதமுள்ளவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.

இந்த 40 விமானங்களின் தயாரிப்பால் சுமார் 15000 நேரடி வேலை வாய்ப்புகளும் 10000 மறைமுக வேலைவாய்ப்புகளும் அடுத்த 10 ஆண்டுகளில் உருவாகும என கூறப்படுகிறது.