
இந்தியா உடனான அமெரிக்க உறவுகள் பலமாகி வரும் நேரத்தில் எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது என செனட்டர் ஒருவர் கூறியுள்ளார்.
ரிபப்ளிக்கன் கட்சியை சேர்ந்த செனட்டர் டாம்மி டியபர்வில் சமீபத்தில் இந்தியா சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினோம் சீன விவகாரம் குறித்து விவாதித்தோம்,
இந்தியா ஒரு ஏஜீஸ் அல்லது பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கியிருந்தால் மிக்க மிகழ்ச்சி தான், ஆனாலும் அவர்களின் தற்போதைய முடிவு காரணமாக உறவுகள் பாதிப்படைய கூடாது என அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் நாடுகள் மீது தடைகளை விதிக்கும் எனவும் இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்படாது எனவும் கூறிவந்த நிலையில் இக்கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற பிறகு இதுவரை CAATSA விதியின் கீழ் இந்தியா மீது தடைகளை விதிக்குமா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.