இந்தியா வலிமையற்ற நாடில்லை 1962ஆம் ஆண்டு போர் நினைவு விழாவில் பாதுகாப்பு அமைச்சர் பேச்சு !!
1 min read

இந்தியா வலிமையற்ற நாடில்லை 1962ஆம் ஆண்டு போர் நினைவு விழாவில் பாதுகாப்பு அமைச்சர் பேச்சு !!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கிழக்கு லடாக்கில் உள்ள ரேசாங் லா பகுதியில் 1962 போர் நினைவிடத்தில் நினைவு விழாவில் கலந்து கொண்டார்.

அங்கு புதுப்பிக்கப்பட்ட போர் நினைவகத்தை திறந்து வைத்துவிட்டு போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது இந்தியா வலிமையற்ற நாடில்லை எனவும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எவருக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.