அமெரிக்காவிடம் இருந்து கடற்படை பிரங்கிகள் வாங்கும் ஒப்பந்தம் ரத்து !!

  • Tamil Defense
  • November 6, 2021
  • Comments Off on அமெரிக்காவிடம் இருந்து கடற்படை பிரங்கிகள் வாங்கும் ஒப்பந்தம் ரத்து !!

டொனால்ட் டரம்ப் அதிபராக இருந்த போது இந்தியா அமெரிக்காவிடம் இருந்து கடற்படைக்காக சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பிரங்கிகள் வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது.

இப்படி 13 மார்க்-45 ரக பிரங்கிகளை வாங்கி இந்திய கடற்படையின் 4 விசாகப்பட்டினம் ரக நாசகாரி கப்பல்கள் மற்றும் 7 நீலகிரி ரக ஃப்ரிகேட்களிலும் பொருத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

தற்போது இந்திய அரசு நிறுவனமான பாரத் கனரக மின்னனு நிறுவனத்தின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரங்கிளுக்கு சாதகமாக அமெரிக்கா உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஒப்பந்தம் நிறைவேறி இருந்தால் பி.ஏ.இ நிறுவனம் தயாரிக்கும் மார்க்-45 ரக பிரங்கியின் மாட்4 ரகத்தை பெறும் வெகு சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றிருக்கும்.