ஹாலிவுட் பாணியில் உலகை விண்கற்களிடம் இருந்து பாதுகாக்க தயாராகும் நாசா 2022ஆம் ஆண்டு சோதனை !!

  • Tamil Defense
  • November 6, 2021
  • Comments Off on ஹாலிவுட் பாணியில் உலகை விண்கற்களிடம் இருந்து பாதுகாக்க தயாராகும் நாசா 2022ஆம் ஆண்டு சோதனை !!

நாசா அமைப்பானது உலகை விண்கற்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட உள்ளது.

அதன்படி வருகிற 2022ஆம் ஆண்டு ஒரு செயற்கைகோளை மணிக்கு 15,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க வைத்து விண்கல் ஒன்றின் மீது மோதி சோதனை செய்ய உள்ளது.

DART என பெயர் கொண்ட இந்த சோதனைக்கு சுமார் 330 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக டைடிமோஸ் “DIDYMOS” என்ற விண்கல்லை சுற்றி வரும் டிமார்ஃபஸ் (DIMORPHOS) என்ற மற்றொரு விண்கல் இலக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த DART செயற்கை கோளானது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன்9 ராக்கெட் மூலமாக வான்டென்பெர்க் விண்வெளி படை தளத்தில் இருந்து ஏவப்படும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.