
காஷ்மீரில் சிஆர்பிஎப் படைக்கு ஒதுக்கப்பட்ட 65.5 ஏக்கர் நிலத்தை விரைவில் தரும்படி சிஆர்பிஎப் படை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேட்டுள்ளது.
அதற்காக நிதியை விரைவில் மாற்றினால் தான் காஷ்மீர் நிர்வாகத்திடம் இருத்து நிலத்தை பெற்று வீரர்களுக்கான இருப்பிடத்தை அமைக்க முடியும் என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலதிக நிலம் பெறும் சிஆர்பிஎப் படையின் கோரிக்கையும் தற்போது பரிசீலனையில் உள்ளது.காஷ்மீரில் பெருமளவு சிஆர்பிஎப் படைப் பிரிவு உள்ளதாக அதற்கேற்ப நிலத்தை வழங்குவது அவசியமாகிறது.மேலும் தற்போது வீரர்கள் அரசு கட்டிடங்கள் அல்லது மகால்களில் தற்காலிகமாகவே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.