
இந்திய பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய் கிழமை அன்று இந்திய விமானப்படைக்கு GSAT-7C செயற்கைகோள் மற்றும் இதர கருவிகளை ரூ.2236 கோடியில் வாங்க அனுமதி வழங்கி உள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலமாக இந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு நெட்வொர்க் பன்மடங்கு வலுவாகும் என இந்திய விமானப்படையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கான அனுமதி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலால் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வரும் இந்த நடவடிக்கையால் இந்திய விமானப்படைக்கு கள நிலவரங்களை அந்தந்த நேரத்திலேயே அறிந்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த GSAT-7C செயற்கைகோள் மூலமாக இந்தியாவின் முப்படைகளால் இந்திய எல்லைக்கு அப்பாலும் தகவல் தொடர்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.