நான்காவது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி இன்று கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது !!

  • Tamil Defense
  • November 25, 2021
  • Comments Off on நான்காவது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி இன்று கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது !!

நான்காவது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ்.வேலா இன்று இந்திய கடற்படையிடம் மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒப்படைக்கப்பட உள்ளது.

ஐ.என்.எஸ் வேலா நீர்மூழ்கி கப்பலை படையில் இணைப்பதன் மூலமாக இந்திய பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் வலு அதிகரிக்கும்.

ஐ.என்.எஸ். வேலாவின் கட்டளை அதிகாரியான கேப்டன். அனீஷ் மேத்யூ பேசுகையில் இந்த அதிநவீன நீர்மூழ்கி கப்பலை படையில் இணைப்பது எங்களுக்கு பெருமையான தருணம் என்றார்.

மொத்தமாக 6 ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்களில் நான்கு படையில் இணைந்த நிலையில் ஐ.என்.எஸ். வாகீர் மற்றும் ஐ.என்.எஸ். வாக்ஷீர் ஆகிய இரண்டு கலன்கள் படையில் இணைய உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.