Breaking News

உலகளாவிய அளவில் தொடரும் சீன ஆளில்லா விமானங்களின் விபத்து !!

  • Tamil Defense
  • November 23, 2021
  • Comments Off on உலகளாவிய அளவில் தொடரும் சீன ஆளில்லா விமானங்களின் விபத்து !!

சீன ஆளில்லா விமானங்கள் சர்வதேச அளவில் அமெரிக்க ஆளில்லா விமானங்களுக்கு மாற்றாக அறிமுகம் ஆனாலும் அவற்றின் தரம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த சந்தேகங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் அவ்வப்போது சீன ஆளில்லா விமானங்கள் விபத்துக்குள்ளாகி வருகிறது, இவற்றை விட துருக்கி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ட்ரோன்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை ஆகும்.

சிலர் சீன ஆளில்லா விமானங்கள் சந்தையில் விலை மலிவானது என வாதிடுகின்றனர் ஆனால் குறிப்பிட்ட சில ஆளில்லா விமானங்களின் விலை அமெரிக்க ஆளில்லா விமானங்களை விட அதிகமாக உள்ளது.

இவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் சீன ஆளில்லா விமானங்களின் விற்பனை அதிகரிப்பதற்கு காரணம் அமெரிக்க ஆளில்லா விமானங்களை போல பயன்பாட்டு நிபந்தனைகள் எதுவும் இல்லை.

இப்படி சில நாடுகள் சீன ஆளில்லா விமானங்களை வாங்கினாலும் கடைசியில் தர பிரச்சினைகள் காரணமாக அல்ஜீரியா ஜோர்டான் ஈராக் போன்ற நாடுகள் வாங்கிய சீன ட்ரோன்களை நிறுத்தியோ அல்லது விற்பனைக்கோ வைத்துள்ளன.

மேலும் மொராக்கோ, துர்க்மேனிஸ்தான், நைஜீரியா போன்ற நாடுகள் சீன ஆளில்லா விமானங்களை ஒதுக்கிவிட்டு துருக்கியிடம் இருந்து ஆளில்லா விமானங்களை வாங்கியுள்ளன.