எல்லை பிரச்சினைகளில் சீன அதிபர் ஜின்பிங்கின் நேரடி தலையீடு ஒப்பு கொண்ட சீன ஊடகம் !!

  • Tamil Defense
  • November 10, 2021
  • Comments Off on எல்லை பிரச்சினைகளில் சீன அதிபர் ஜின்பிங்கின் நேரடி தலையீடு ஒப்பு கொண்ட சீன ஊடகம் !!

சீன அரசு ஊடகமான ஸின்ஹூவா சீன கம்யூனிஸ்ட் கட்சியை புதிய பாதையில் அழைத்து செல்லும் ஜி ஜின்பிங் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தி கட்டுரையில்,

டையோ தீவுகள், தென் சீன கடல்பகுதியில் உள்ள பிரச்சினைகள், இந்திய சீன எல்லை பிரச்சினைகள், சட்டவிரோதமாக வெளிநாடுகளில் கைது செய்யபட்ட சீனர்களை திரும்ப நாடு திரும்ப வைத்தல் என அனைத்திலும் சீன அதிபரின் நேரடி பங்களிப்பு மற்றும் திட்டமிடல் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த சீனாவின் ஆதிக்க செயல்பாடுகளில் நேரடி தொடர்பு கொண்டுள்ளவர் என்பது தெள்ள தெளிவாக விளங்குகிறது.

பல ஆண்டுகளில் மிக மோசமான கல்வான் பிரச்சினைக்கு பிறகு சீனா தனது ஒருதலைபட்சமான செயல்பாடுகளுக்கு பொறுப்பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.