
நேற்று தைவானுடைய வான் பகுதிக்குள் சுமார் 27 சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
இதனையடுத்து தைவான் விமானப்படை தனது போர் விமானங்களை அனுப்பி எச்சரித்ததாகவும் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை செயல்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தைவானை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் அவ்வப்போது சீன விமானப்படையின் விமானங்கள் தைவானுடைய வான் பாதுகாப்பு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வருவது குறிப்பிடத்தக்கது.